shankar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், அந்நியன், காதலன் இந்தியன் என இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் பாதியில் கைவிடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் முடிந்த பின் ரூ.1000 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை ஷங்கர் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இது அவரின் கனவு பிராஜெக்ட் என கூறப்படுகிறது. இப்படம் ஒரு பேன் இண்டியா திரைப்படமாக உருவாகும் எனவும் இதில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.