web analytics
Sunday, August 7SOCIAL MEDIA

படம் இயக்கி சாதித்த புளூசட்ட மாறன் – பலரும் பாராட்டும் ‘ஆண்டி இண்டியன்’…

புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என கடுமையாக கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வருபவர் புளூசட்ட மாறன். யூடியூப்பில் தமிழ் டாக்கீஸ் என்கிற சேனயில் இவரின் வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம்.

திரைப்படங்களை கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்வதால் திரைத்துறையின் கோபத்திற்கு ஆளானார் மாறன். முடிந்தால் நீ ஒரு படத்தை எடுத்து காட்டு என இயக்குனர்கள் பலரும் இவரிடம் சவால் விட தற்போது ஆண்ட்டி இண்டியன் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை சமீபத்தில் இயக்குனர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டியுள்ளார் மாறன். படம் பார்த்த பாரதிராஜா, சேரன், பாக்கியராஜ் ,சீமான், விக்ரம் என பலரும் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர்.

இது ஆண்டி இண்டியன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

%d bloggers like this: