கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து டிஷ்னி ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இப்படம் வெளியான முதல் நாளே படம் நன்றாக இல்லை என எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. எனவே, ரசிகர்கள் அப்படத்தை ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
இதனால் இப்படத்தை வாங்கிய டிஷ்னி ஹாட் ஸ்டாருக்கு பல கோடிகள் நஷ்டமாம். பொதுவாக பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர், அல்லது நடிகரின் முந்தை படத்தின் வெற்றி, இயக்குனரின் முந்தைய படத்தின் வெற்றி இதை வைத்தே ஓடிடி நிறுவனங்கள் ஒரு படத்தை தயாரிப்பாளரிடம் வாங்கி வந்தது.
ஆனால், இப்படத்தின் தோல்வியால் இனிமேல் ஒரு திரைப்படத்தை பார்த்து நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவது என்கிற முடிவுக்கு டிஷ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் வந்துள்ளதாம்.
எனவே, மாறன் திரைப்படத்தால் மற்ற படங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.