தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேமுதிக என்கிற அரசியல் கட்சியையும் துவங்கினார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
ஒருகட்டத்தில் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சரியாக பேச முடியாமல், நடக்க முடியாமல் இருந்தார். எனவே, தீவிர அரசியலில் அவர் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவரின் காலில் இருந்து 3 விரல்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இதையடுத்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.