don

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை தொட்டது.

இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் வியாபார மதிப்பு திரைத்துறையில் அதிகரித்துள்ளது. இது அவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள டான் திரைப்படத்தின் வியாபாரத்தையும் அதிகரித்துள்ளது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.50 கோடி வியாபாரத்தை தாண்டியுள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.20 கோடிக்கும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி ரூ.18 கோடிக்கும் வாங்கியுள்ளது. இசை, டப்பிங் உரிமை என இப்படம் ரூ.55 கோடியை தொட்டுள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகி அதில் வரும் வசூலையும் கணக்கிட்டால் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்யும் என திரையுலகினரால் கணிக்கப்படுகிறது.

இப்படம் மே 13ம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.