don

டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

don

இப்படம் கடந்த 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வருவது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடியையும், உலகமெங்கும் சேர்த்து இப்படம் ரூ.13 கோடியை வசூல் செய்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. எனவே, படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.35 கோடியை டான் படம் வசூல் செய்துள்ளது.