don

டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வருவது அப்படகுழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

don

இந்நிலையில், இப்படம் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடியை வசூல் செய்துள்ளது. உலகமெங்கும் சேர்த்து இப்படம் ரூ.13 கோடியை வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் முதல்நாளில் ரூ.13 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.