டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவத்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா புரடெக்ஷன் என இருவரும் இணைந்து தயாரித்துள்ள்னர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ஜலபுல ஜங்கு பாடல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதன் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் புரமோ வீடியோவை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் அசத்தலான நடனமாடியிருப்பது தெரிய வருகிறது.
இப்படத்திலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.