மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் த்ரிஷம். இப்படம் தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்கிற பெயரில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதையும், ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா ஷரத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை. எனவே, பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.