தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான தமிழ் ஆல்பம் ‘என்ஞாய் என்ஞாமி’ இந்த பாடலை பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியாகி நெட்டிசன்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த பாடல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.
இந்நிலையில், இந்த பாடலை இதுவரை 5.1 கோடி பேர் பார்த்துள்ளனர். அதேபோல் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்.