சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சூரி, சத்தியராஜ் என பலரும் நடித்துள்ளனர்.

குடும்ப பாங்கான படங்களை இயக்கி வரும் பாண்டிராஜ் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் விருந்தையும் ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

et