சினிமா உலகை பொறுத்தவரை எப்போதும் போட்டி பொறாமைகள் இருக்கும். ஒருவரை எப்படி கீழே இறக்கிவிடுவது என்பதற்கு போட்டி போட்டு கண் முழித்து வேலை பார்ப்பார்கள். அதையும் மீறி தாக்கு பிடிப்பது என்பது சாமார்த்தியம்தான். குறிப்பாக நடிகர்களுக்குள் வெளியே சொல்லிக்கொள்ள முடியாக போட்டிகள் நிறைய இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அருண்விஜய் தனது டிவிட்டர் பகக்த்தில் ‘யாருலாம் மாஸ் காட்டுறதுன்னு வெவஸ்த இல்லாம போச்சு..மக்களுக்கு புரியும்’ என பதிவிட்டிருந்தார்.ஒரு திரைப்பட விழாவில் ஜிம் பாய்ஸ் புடை சூழ சிவகார்த்திகேயன் வந்ததை பார்த்த காண்டில்தான் அவர் அப்படி பதிவிட்டார் என பலரும் கூறினர்.
இந்நிலையில், அவரின் மகன் அர்னவ் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில்,ரசிகர்களின் ஆசிர்வாதங்கள் அவருக்கு தேவை என அருண்விஜய் டிவிட்டரில் பதிவிட்டார்.இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும், ஓ மைக் டாக் திரைப்படத்தில் அருண் விஜயின் மகன் அர்ணவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் தன் மீது கடுப்பாக இருக்கும் அருண் விஜயிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் காட்டாமல் அவரின் மகனுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு, சிவகார்த்திகேயனுக்கு அருண்விஜய் நன்றியும் தெரிவித்துள்ளார்.