don

டாக்டர் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி எனும் இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழக்கை மற்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை சென்டிமெண்ட் கலந்த காட்சிகளுடன் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

don

இப்படம் எப்படி இருக்கிறது என முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி கல்லூரி வாழ்க்கை, காமெடி காட்சிகள் என செல்வதாகவும், 2ம் பாகம், தந்தை-மகன் உறவு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் என செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

don

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அனிருத்தின் பின்னணி இசை பல காட்சிகளில் அசத்தலாக இருப்பதாகவும், படத்தின் இறுதி 30 நிமிட காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் டாக்டருக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு டான் திரைப்படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபக்கம் இப்படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களையும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.முதல் பாதியில் இடம்பெற்றுள்ள கல்லூரி காட்சிகள் வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் செயற்க்கைதனமான காட்சிகள் என்றும், எஸ்.ஜே. சூர்யா மட்டுமே சிறப்பாக நடித்திருப்பதாகவும், மற்றபடி படம் போரடிப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

எதுவாக இருந்தாலும் டான் படம் எப்படி என்பது விரைவில் தெரிந்துவிடும்.