web analytics
Wednesday, November 30SOCIAL MEDIA

காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?..

kvrk

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர்

இந்நிலையில், இப்படம் நேற்று ஒருநாளில் ரூ.5.20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: