web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

விரைவில் புதிய சீரியலில் கேப்ரியல்லா…ரசிகர்கள் அதிர்ச்சி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் உள்ளவர். இவரை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டிவி. பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சின்னத்திரையில் நடிக்கவுள்ளர். ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் கேப்ரியல்லா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியில் வெளியாகி வெற்றியை பெற்ற ஒரு சீரியல் ஆகும். எனவே, தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இதில்தான் கேப்ரியல்லா நடிக்கவுள்ளார்.