அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இது அஜித்குமாரின் 61வது திரைப்படமாகும்.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. வலிமை படம் ரிலீஸ் ஆனவுடன் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.