விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் மரணம் தொடர்பான விசாரணை நடத்தி போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரலங்களின் ஆவிகளுடன் பேசும் சார்லி சிட்டண்டன் என்பவர் சித்ரா ஆவியுடன் பேசியுள்ளார். நீங்கள் எப்படி இறந்தீர்கள்?’ என அவர் கேட்க ‘அதை என்னால் கூற முடியாது’ என சித்ரா பதிலளிக்கிறார். மேலும், மோசமானது.. அவர்கள் வந்தார்கள். எனக்கு அன்பு வேண்டும்.. கூற முடியவில்லை. என அவர் பேசுவது அதில் பதிவாகியுள்ளது. உங்கள் உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என அவர் கேட்க ‘முடிந்துவிட்டது’ என அவர் பதில் கூறுகிறார்.