gitanjali

காதல் கொண்டேன், 7ஜொ ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களை இயக்கி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் செல்வராகவன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவர் ஆடை வடிவமைப்பாளர் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உண்டு.

சமீபத்தில் ஒரு பேட்டியில் செல்வராகவன் மீது எப்படி காதல் வந்தது என்பதை கீதாஞ்சலி கூறியுள்ளார். 2010ம் ஆண்டு செல்வராகவன் உருவாக்கிய கதைதான் ‘கானல் நீர்’. அந்த கதையை படித்த பின்னரே அவர் மீது காதல் வயப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். அந்த கதைதான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் ‘இரண்டாம் உலகம்’ என்கிற தலைப்பில் திரைப்படமாக வெளியானது என அவர் தெரிவித்தார்.