வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் அல்லது ஜூலை மாதம் முடியவுள்ளது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு பின் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் விஷ்னு வர்தான் அஜித்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார். எனவே, அவரே அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனை டிக் செய்துள்ளார் அஜித்.
இதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் படி ஏற்கனவே நயன்தாரா அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் 2 பாடல்களை எழுதியிருந்தார். இதில், அவர் எழுதிய ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ எனும் தாய் செண்டிமெண்ட் பாடல் அஜித்துக்கும் மிகவும் பிடித்துவிட, அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் விக்னேஷ் சிவனை போனில் அழைத்து நிறைய நேரம் பேசுவாராம். அப்போது விக்னேஷ் சிவன் ஒரு கதையை அஜித்திடம் கூற அதில் நடிப்பது என அஜித் முடிவு செய்துள்ளார்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளது.