web analytics
Wednesday, December 7SOCIAL MEDIA

அது ஒன்னுதான் வலிமையில் குறை!… நடிகை ஹூமா குரோஷி புலம்பல்…

huma qureshi

அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது.

valimai

இப்படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக போலீஸ் அதிகாரியாக ஹூமா குரோஷி நடித்துள்ளார். இவர் பேட்ட படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்தவர். வலிமை படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.

huma qureshi

சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘முதன் முதலாக வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம் பெற்ற பைக் சாகச காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். வசனம் பேச இயக்குனர் வினோத் உதவினார். படப்பிடிப்பு தளத்தில் அஜித் உதவினார். இப்படத்தில் அஜித்துடன் எனக்கு டூயட் இல்லை. அது ஒன்றுதான் வருத்தம். தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: