web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

நான் அதை செய்வதே கிடையாது.. ஹாக் கொடுத்த இளையராஜா….

ilayaraja

தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் பாடல்களே பலரின் துயரத்திற்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோரின் வருகைக்கு பின் இவர் அதிக திரைப்படங்களில் இசை அமைப்பதில்லை. ஆனால், அதைபற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதுமில்லை. நானே எனக்கு ராஜா என அவர் பயணித்து வருகிறார்.

ஒருமுறை அவரிடம் ‘உங்களை பாதித்த விமர்சனம் ஏதாவது இருக்கா?’ என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய ராஜா ‘விமர்சனங்கள் என்னை பாதித்தது இல்லை. நான் செய்த தவறை விமர்சனங்களில் சுட்டி காட்டினாலும் காலம் கடந்து போய் அதை திருத்த முடியாது. ஆரம்ப காலத்தில் தப்பு சொல்லனும்னே வந்த விமர்சனங்கள் எல்லாம் இருக்கு. என்னை பற்றி கிசுகிசு, ஜோக் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்து கொண்டுதான் இருந்தன.

அந்த நேரத்தில் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’என்ற குரல் ஞாபகம் வந்தது. நீ எது எது வேண்டாம் என நினைக்கிறாயோ அதனால் துன்பம் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம். எனவே, நான் பத்திரிக்கை படிப்பதையே நிறுத்தி விட்டேன். இப்போதும் படிப்பது கிடையாது என பதில் கூறினார் இசைஞானி இளையாராஜா.

அவர் சொல்வதும் சரிதான்…

%d bloggers like this: