திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு.
ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் – ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.
தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதில், நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.