திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு.
ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் – ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.
தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து ஐஸ்வர்யா கதை பற்றி விவாதித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதே கருத்தை ராகவா லாரன்ஸும் தெரிவித்துள்ளார். எனவே, ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஐஸ்வர்யா சிம்புவை இயக்கப்போகிறார் என்கிற செய்தி உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
Something interesting is brewing…my brain is racing after meeting up with my dear @offl_Lawrence Anna ! #workmode on ..wherever whenever whatever! pic.twitter.com/iv1DOryuMe
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 13, 2022