jagame thanthiram

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதோடு, இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக தெரிவித்து இப்படத்தின் டீசர் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.