சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை பத்திரிக்கையாளர் ஞானவேல் இயக்கியிருந்தார். இருளர் மற்றும் குறவர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவருக்கு காவல்துறையால் இழைக்கப்பட்ட அநீதிக்கு வழக்கறிஞர் சூர்யா நியாயம் பெற்று தருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இது உண்மை கதையாகும்.

இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதேநேரம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காலண்டர் காட்சி வன்னியர் சாதியை குறிப்பதாக கூறி அந்த சாதியை சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த ஆதரவு அந்த பிரச்சனைகளை முடக்கியது.

தற்போது 2021ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ படம் என்கிற பெருமை ஜெய்பீம் திரைப்படம் தட்டி சென்றுள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

twit