சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர்.

இப்படம் பல விருதுகளையும் பெருமையையும் பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படம் அடுத்த மகுடத்திற்கு தயாராகியுள்ளது. அதாவது, Noida International Film Festival – அதாவது நொய்டா திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது.