வெயில், அங்காடித்தெரு போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ஜெயில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சி புகழ் அபர்னதி நடித்துள்ளார்.
இப்படம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இப்படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார்.
தற்போது இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்தின் வெளியீட்டு உரிமை எங்களிடம் இருப்பதால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு எதிராகவே இன்று நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. எனவே, ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி வருகிற 9ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.