web analytics
Wednesday, December 7SOCIAL MEDIA

இயக்குனர் ஜனநாதன் காலமானார்…

jananahan

இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு எனும் பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜனநாதன். கம்யூனிச சிந்தாந்த்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது திரைப்படங்களிலும் புரட்சிகரமான கருத்துக்களை பிரதிபலித்து வந்தார். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளம் ‘லாபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தது.

நேற்று முன் தினம் மாலை தனது வீட்டில் சுயநினைவின்றி அவர் மயங்கி கிடந்தார். அதைக்கண்ட அவரின் உதவியாளர்கள் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. எனவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியானது..

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் திரை உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

%d bloggers like this: