நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்திற்கும் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின் சூர்யா பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே சூர்யா அறிவித்தார். தற்போது இப்படம் டேக் ஆப் ஆகியுள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். ஆனால், இப்படத்தில் அவர் சூர்யாவுக்கு மனைவியாக நடிக்கிறாரா இல்லை வேறு கதா பாத்திரமா என்பது தெரியவில்லை.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் சூர்யாவும்-ஜோதிகாவும் இப்படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.