மைனா, கும்கி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அதன்பின் அவர் இயக்கிய கயல், தொடரி போன்ற திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, மீண்டும், காடு, யானைகளை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் காடன். இப்படத்தில் நடிகர் ராணா மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.