kvrk

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர்.

kvrk

இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ.5.20 கோடி வசூல் செய்தது. முதல் நாள் சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 29ம் தேதி ரூ.5.10 கோடியும், 30ம் தேதி ரூ.6.10 கோடியும், மே 1ம் தேதி ரூ.6.50 கோடியும் என மொத்தம் ரூ.23 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளது. இது இந்த வார பீஸ்ட் பட வசூலை விட அதிகம் ஆகும். இந்த வாரம் இறுதிவரை இப்படம் ரூ.34 கோடியை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கேக் வெட்டி அவர்கள் இதை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.