பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகர் சித்ரா. சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். அதன்பின் அந்த சீரியலில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர் காவ்யா அறிவுமணி.
இந்நிலையில், தாவணி பாவாடை அணிந்து சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்களை காவ்யா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.