தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சில மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருப்பது அவரின் சமூக வலைத்தளபக்கங்களில் அவர் பகிறும் புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.

இந்நிலையில், 2 காதல் அகர்வாலுக்கு நடுவே அவரின் கணவர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. முதலில் இதைக்கண்டு ரசிகர்கள் அதிருந்து போனாலும், இதில் ஒன்று காஜலின் மெழுகுச்சிலை என்பது தெரிய வந்தது. இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூரில் வைக்கப்படவுள்ளது. அந்த புகைப்படத்தைத்தான் காஜல் அகர்வால் பகிர்ந்து ரசிகர்களை குழப்பியுள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது.