kamal

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசிவருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

vikram

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இதுபோன்று எமோஷனலாக நான் இருந்தது இல்லை. என்னையும், விக்ரமையும் ஏற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்த அன்புக்கு கைமாறாக நான் என்ன செய்வதென்று தெரியவில்லை.கமல்ஹாசன் சாருக்கும், என் மீது அன்பு காட்டுபவர்களுக்கும் மிக்க நன்றி’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள கமல் ‘ரசிகர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு ஒரு போதும் மனநிறைவடையாமல் இருப்பதுதான். நேர்மையான வேலையை செய்யுங்கள். அவர்கள் அதை மதிப்பார்கள். அவர்களின் அன்பிலிருந்துதான் எனக்கும் வலிமை பிறக்கிறது. உங்கள் முயற்சிக்கு எல்லா சக்தியும் கிடைக்கும். ராஜ்கமல் பிலிம்ஸ் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.