லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் ஒரு விலை உயர்ந்த Lexus காரை பரிசாக அளித்துள்ளார். அதேபோல், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு விலை உயர்ந்த பைக்கை பரிசளித்தார்.
இந்நிலையில், இப்படத்தில் 3 நிமிடங்களே வந்தாலும் ரோலக்ஸ் வேடத்தில் கலக்கிய சூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரின் அலுவலகத்துக்கு சென்ற கமல் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்து. இது சூர்யாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.