web analytics
Friday, July 1SOCIAL MEDIA

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

lokesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

kamal

இப்படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளதால், அவருக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. என் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வரவேற்பை நான் பார்த்ததே இல்லை என கமலே கூறும் அளவுக்கு விக்ரம் படத்தின் வெற்றி அமைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் ஒரு விலை உயர்ந்த Lexus காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

lokesh

%d bloggers like this: