kamal

நடிகர் கமல்ஹாசன் கடந்த 55 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு பின் நடிக்கவந்த நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டாராக மாறி அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு பல வருடங்களுக்கு முன்பே உயர்ந்துவிட்டார். ரஜினியை ஒப்பிட்டால் கமலுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த சில வருடங்களில் ரஜினி ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்க கமலோ திரைப்படங்களில் நடிக்காமல் பிக்பாஸ், அரசியல் என வேறுபக்கம் ஒதுங்கினார். கமலின் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதான் முடிவுக்கு வந்துவிட்டது என ரசிகர்கள் மட்டுமில்லாமல் நினைத்தனர்.

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது. இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது. 25 நாட்களுக்கு மேலும் இப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

vikram

எனவே, தனது சம்பளத்தை ரூ.130 கோடியாக கமல்ஹாசன் ஏற்றிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அண்ணாத்த படம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரஜினி ரூ.80 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்திற்கு ரூ.110 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அஜித்தும் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார்.

ஆனால்,கமல் இவர்கள் எல்லாவற்றையும் மிஞ்சி ரூ.130 கோடிக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.