kamal

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், திடீரென இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். எனவே, அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாகவும் அது விருமாண்டி 2 எனவும் செய்திகள் வெளியானது.

muthaiah

ஆனால், அதில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை முத்தையா இயக்கவது உண்மைதான். ஆனால், அதில், கமல்ஹாசன் நடிக்கவில்லை. அதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதற்காக ஆர்யாவுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.