லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என பலரும் நடித்து வெளியான திரைப்படம் உலகமெங்கும் ரூ.250 கோடி வசூலை தாண்டிவிட்டது. தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளது.
கமல் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் அவர் எந்த திரைப்படங்களில் நடிக்காமல் அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என இருந்துவிட்டார்.
இந்நிலையில், தற்போது விக்ரம் திரைப்படம் அதிரிபுரிதி ஹிட் அடித்து விட்டதால் அவர் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தேவர்மகன் 2 ஆகிய படங்கள் தூசி தட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.