மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜும், கமல்ஹாசனும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் பேசிய கமல் ‘இப்படத்திற்காக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன்.லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறினால் அவர் அந்நியப்பட்டுவிடுவார். நாங்கள் நல்ல படம் எடுத்துள்ளோம். விக்ரம் வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும். என்னிடம் அதிக பணமெல்லாமில்லை. நான் சம்பாதிப்பதை மக்களுக்கு பயன்படுத்துவேன்.
விக்ரம் 3-க்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குனர் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தியன் 2 எனது அடுத்த படங்களில் நிச்சயம் இடம்பெறும்’ என தெரிவித்துள்ளார்.