kamal

நடிகர் கமல் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரது நடிப்பில் உருவான விஸ்வரூபம் 2 படம் வெளியாகி 4 வருடங்களும் மேல் ஆகிவிட்டது. அதன்பின் பிக்பாஸ் 5 சீசன்களை தொகுத்து வழங்கியது, அரசியலில் இறங்கியது என அதிலேயே ஓட்டினார். தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஒருபக்கம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல புதிய திரைப்படங்களை தயாரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே விஜயிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

suriya

அதேபோல், விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் சூர்யா நடித்திருப்பதால் அவரிடமும் கமல் கால்ஷீட் கேட்டுள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வலை வீசி வருகிறது. இதில், ஜெயம்ரவி அவராக கமலை தொடர்பு கொண்டு உங்கள் நிறுவனத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளாராம்.

எனவே, கமல் இனிமேல் முழுநேரம் சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.