பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்த மாதம் 25ம் தேதி உலகமெங்கும் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
அதேநேரம், இப்படம் கர்நாடகாவில் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இப்படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் வெளியாகவில்லை என்பதுதான். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் மட்டுமே அங்கு திரையிடப்படுகிறது எனக்கூறப்படுகிறது.
எனவே, இது தொடர்பான ஆதாரங்களை டிவிட்டரில் பகிர்ந்து எங்கள் மாநிலத்தில் எங்கள் மொழியில் படத்தை வெளியிடாதது எங்களுக்கு நீங்கள் செய்யும் அவமானம். எனவே, இப்படத்தை நிராகரிப்போம் எனக்கூறி #BoycottRRRinKarnataka என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இதைக்கண்ட ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணின் ரசிகர்கள் ‘நீங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தை நிராகரித்தால் நாங்கல் கே.ஜி.எப்ஃ 2வை நிராகரிப்போம்’ என பதிவிட்டு வருகின்றனர். படம் வெளியாக இடையே இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கர்நாடக மொழியில் இப்படம் வெளியாக வாய்ப்பில்லை எனக்கருதப்படுகிறது.