மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவும் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.