கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிக்குமார், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினி ‘இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய போஸ்டரையும் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார்.