விஜய் தொலைக்காட்சியில் வெளியான சில சீரியல்களில் நடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதில் ‘Lift’ என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கவின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.