கேஜிஎப் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கன்னடத்தில் மட்டுமல்ல. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
கேஜிஎப் படத்தின் மையக்கருவே அம்மா கூறும் வேத வாக்குகளை ஏற்று மகன் செயல்படுவதுதான். கேஜிஎப் 2 படத்திலும் அப்படித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராக்கி பாயின் அம்மாவாக நடித்திருப்பவர் அர்ச்சனா ஜோயிஸ். முதல் பாகத்தில் இவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், அர்ச்சனா ஜோயிஸ் மிகவும் இளமையானவர். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவரா அம்மா வேடத்தில் நடித்தார்?’ என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.