தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் ரூ.64.04 கோடி வசூலித்துள்ள நிலையில், பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது.
கேஜிஎப்-2 திரைப்படம் ஆந்திராவில் சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் ஆந்திராவில் 100 கோடி வசுலை பெற்றது. பங்கு தொடையாக ரூ.54 கோடி கிடைத்தது. ஆனால், கேஜிஎப்2 திரைப்படம் ரூ.103 கோடியை வசூல் செய்துள்ளது. பங்கு தொகையாக ரூ.64 கோடியையும் வசூலித்துள்ளது. கேஜிஎப் முதல் பாகம் ஆந்திராவில் ரூ.13 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒரு கன்னட டப்பிங் திரைப்படம் விஜய் பட வசூலை தாண்டியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.