kgf2

கேஜிஎப் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கன்னடத்தில் மட்டுமல்ல. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இப்படம் நல்ல வூலை பெற்று வருகிறது.

kgf

படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.625 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலை இப்படம் வசூலித்துள்ளது. தமிழகத்தில் இப்படம் ரூ.52 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இத்தனைக்கும், விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியானது. இப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்திற்கான திரையரங்குகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.