web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

kgf

தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாளில் ரூ.64.04 கோடி வசூலித்தது. பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது. தற்போது வரை தமிழகத்தில் ரூ.90 கோடியை வசூல் செய்துள்ள கேஜிஎப்-2 விரைவில் ரூ.100 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது.

kgfv

இந்நிலையில், தமிழகத்தில், பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் வசூலை இப்படம் தாண்டியுள்ளது. படம் வெளியாகி 20 நாட்களில் திருச்சியில் இப்படம் ரூ. 2.56 கோடி வசூல் செய்துள்ளது. இது இந்த வருடம் வெளியான வலிமை, பீஸ்ட் பட பாக்ஸ் ஆபிஸை விட அதிகம் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு கன்னட டப்பிங் திரைப்படம் விஜய், அஜித் படங்களின் வசூலை தாண்டியுள்ளது விஜய், அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

%d bloggers like this: