kgf

தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அ

திலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

beast

தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி 3 வாரம் முடிந்து 4வது வாரத்தில் 2 நாட்கள் முடிந்த நிலையில் இப்படம் ரூ.65.28 கோடி வசூலை பெற்றுள்ளது.

ஆனால், பீஸ்ட் வெளியாகி அடுத்த நாள் வெளியான கேஜிஎப்2 திரைப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ. 113.79 கோடி வசூலை பெற்றுள்ளது. அதாவது,பீஸ்ட் படத்தை விட கேஜிஎப்-2 திரைப்படம் தமிழகத்தில் உள்ள் திரையரங்க அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

kgf2 movie collected more than best

kgf2 collection,tn box office, beast, கேஜிஎப்2, பீஸ்ட், விஜய்